Published : 23 Nov 2017 05:26 PM
Last Updated : 23 Nov 2017 05:26 PM

பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேயை மணந்தார் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேயை வியாழனன்று பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் பதிவுத்திருமணம் நடந்த முதல் புகைப்படம் ஜாகீர் கானின் புரோஸ்போர்ட் ஃபிட்னெஸ் ஸ்டூடியோவின் மார்க்கெட்டிங் தலைவர் அஞ்சனா ஷர்மாவால் வெளியிடப்பட்டது,

ஜாகீர் கானுக்கும் சகாரிகாவுக்கும் கடந்த மே மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 27-ம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸில் நடைபெறுகிறது.

சகாரிகா காட்கே, ஷாரூக்கானின் ‘சக் தே இந்தியா’ படம் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x