

முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக-வின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானியின் பிறந்தநாளான இன்று (நவ.8), அவருக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சார்பில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே. அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார். அவருக்கு வயது 90.
ஒருபுறம், பணமதிப்பு நீக்கத்தைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சித்துவரும் நிலையிலும், பாஜகவின் முக்கியத் தலைவரான எல்.கே. அத்வானிக்கு ராகுல் காந்தி சார்பில் பொதுவெளியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது, சிறந்த அரசியல் நாகரிகமாகக் கருதப்படுகிறது.