கனடா ஓபன் பாட்மிண்டன் - அரை இறுதியில் சிந்து, லக் ஷயா சென்

கனடா ஓபன் பாட்மிண்டன் - அரை இறுதியில் சிந்து, லக் ஷயா சென்
Updated on
1 min read

கல்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக் ஷயா சென் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக் ஷயா சென், ஜெர்மனியின் ஜூலியன் கராக்கியை எதிர்த்து விளையாடினார். இதில் லக் ஷயா சென் 21-8, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரை இறுதி சுற்றில் லக் ஷயா சென், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து,சீனாவின் காவோ பாங் ஜியுடன் மோதினார். இதில் சிந்து 21-13, 21-7 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். அரை இறுதி சுற்றில் சிந்து, முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in