

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி தங்களது முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் கில்லர்மோ டுரான், தாமஸ் எட்செவெரி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள போபண்ணா, எப்டன் ஜோடி 6-2, 6-7, (5-7), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்றது. 2-வது சுற்றில் இங்கிலாந்தின் ஜேக்கப் ஃபியர்ன்லி, ஜோஹன்னஸ் ஜோடியுடன் மோதுகிறது போபண்ணா, எப்டன் ஜோடி.