செல்லப்பிராணிகளுடன் கேக் வெட்டிய தோனி

செல்லப்பிராணிகளுடன் கேக் வெட்டிய தோனி
Updated on
1 min read

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று முன்தினம் 42-வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.

இந்நிலையில் தோனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் செல்லப் பிராணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். கேக்கை தானும் உண்டு செல்லப் பிராணிகளுக்கும் பகிரும் வீடியோவின் பின்னணியில் இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது.

வீடியோவின் கீழ், “உங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி. என் பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பது உங்கள் பார்வைக்காக” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு மணி நேரத்தில் 29 லட்சம் லைக்குகளை அள்ளியது. பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in