

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 42வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு சச்சின், சேவக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தோனியின் பிறந்த நாளை அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பாக அவர், தனது சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் உங்களுக்காக நான் கேட் வெட்டுகிறேன்.
நாடு முழுவதும் உள்ள பலருக்கு உத்வேகமாக நீங்கள் உள்ளீர்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.