ஆசிய யு-20 பிரிவில் சிறந்த தடகள வீரராக செல்வ பிரபு தேர்வு

செல்வ பிரபு | கோப்புப்படம்
செல்வ பிரபு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சிறந்த தடகள வீரராக தமிழகத்தை சேர்ந்த டிரிப்பிள் ஜம்ப் வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, வரும் 10-ம் தேதி தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய தடகள சங்கத்தின் 50-வது ஆண்டு கொண்டாட்ட விழாவின் போது விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் செல்வ பிரபு. கடந்த 2022-ம் ஆண்டு 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் செல்வ பிரபு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in