

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்னூக்கர் வீரர்கள் ஏ.அப்துல் சைப் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
17 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் ஜூலை 7 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் அப்துல் சைப் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் எஸ்.ஏ.சலீமிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.