

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 50மீ துப்பாக்கி சுடுதல் (பிஸ்டல்) பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது,
ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் மற்றும் குர்பால் சிங் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.
தங்கம் வென்ற ஜிது ராய் 194.1மீ தூரம் ஷூட் செய்து காமன்வெல்த் விளையாட்டுக்களில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
தகுதிச் சுற்றில் ஜிது ராய் 562 புள்ளிகள் பெற்றதும் காமன்வெல்த் ரெக்கார்ட் ஆகும்.