Published : 01 Jul 2023 06:39 AM
Last Updated : 01 Jul 2023 06:39 AM

ஸ்குவாஷ்: தீபிகா பல்லிகல், ஹரிந்தர் சிங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஹுவாங்சோவ்: ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள ஹுவாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி தரவரிசையிலில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட, இவான் யூயன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் ஜோடி 11-10, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x