Published : 28 Jun 2023 07:17 AM
Last Updated : 28 Jun 2023 07:17 AM
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
இரு அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது.
பர்மிங்காம் போட்டியில் இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ புரட்சியானது கடும் விமர்சனங்களை சந்தித்தது. அந்த அணி வீரர்கள் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டியலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதிலேயே கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியுடன் களறமிங்குகிறது பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.
இந்த போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் களமிறங்க உள்ளது இங்கிலாந்து அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT