

காமன்வெல்த் போட்டியின் ஜிம்னாஸ்டிக் ரித்மிக் பிரிவில் கனடா வீராங்கனை பேட்ரிசியா பெஸாவ்பெங்கோ 5 தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக் அணி பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பேட்ரிசியா, கிளப் பிரிவு, பால் மற்றும் ஹூப் தனிநபர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். இதுதவிர ரிப்பன் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
ஒருவேளை ரிப்பன் பிரிவில் பேட்ரிசியா தங்கப் பதக்கம் வென்றிருந்தால், காமன் வெல்த் போட்டியில் அதிக தங்கப் பதக்கம் (6 பதக்கம்) வென்றவரான சகநாட்டு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஆர்லேன்டோ வின் சாதனையை சமன் செய்திருப்பார்.