கொல்கத்தாவுக்கு சவால்: இன்று பெங்களூர் அணியுடன் மோதல்

கொல்கத்தாவுக்கு சவால்: இன்று பெங்களூர் அணியுடன் மோதல்
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி, ஹாட்ரிக் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது. அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வென்ற கொல்கத்தா, 2-வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்தது. எனவே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் அந்த அணி வீரர்கள் விளையாடுவார்கள்.

கொல்கத்தா அணியுடன் ஒப்பிடும்போது பெங்களூர் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் கோலி, யுவராஜ் சிங், ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க் கின்றனர். ஐபிஎல் அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் களமிறங்காமலேயே இரு ஆட்டங்களில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதுகு வலி காரணமாக களமிறங்காமல் உள்ள கெயில், இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் களமிறங்கினால் பெங்களூர் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும்.

கொல்கத்தா அணியில் காலிஸ், மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். கேப்டன் கம்பீர் கடந்த இரு போட்டி களிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்டத்தில் டெல்லி பேட்ஸ்மேன்கள், கொல்கத்தாவின் பந்து வீச்சை எவ்வித சிரமும் இன்றி அடித்து விளையாடினர். சுநீல் நரைன் தவிர மற்றவர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. அதிரடி பேட்ஸ் மேன்கள் நிறைந்த பெங்களூர் அணிக்கு எதிராகவும் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்வார்கள் என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் பெங்களூர் அணியில் வருண் ஆரோன், அல்பி மோர்கல், ஸ்டார்க் உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

போட்டி நேரம் : இரவு 8

நேரடி ஒளிபரப்பு : சோனி சிக்ஸ், செட் மேக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in