ரோட்ரிகஸை ரூ.648 கோடிக்கு வாங்கியது ரியல் மாட்ரிட்

ரோட்ரிகஸை ரூ.648 கோடிக்கு வாங்கியது ரியல் மாட்ரிட்
Updated on
1 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோலடித்தவரான (6 கோல்கள்) கொலம்பியா ஸ்டிரைக்கர் ஜேம்ஸ் ரோட்ரிகஸுடன் 6 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ரியல் மாட்ரிட் அணி. அவரை ரூ. 648.9 கோடிக்கு வாங்கியிருக்கிறது ரியல் மாட்ரிட். இதன்மூலம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ரோட்ரிகஸ்.

முன்னதாக மொனாக்கோ அணிக்காக விளையாடி வந்தார் ரோட்ரிகஸ். அவருடைய அணி மாறுதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மொனாக்கோ நிர்வாகம், “கால்பந்து வரலாற்றில் ரோட்ரிகஸின் இடமாற்றம் மிகப்பெரிய இடமாற்றமாகும்” என குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோல்டன் பூட் விருதை வென்ற வரான ரோட்ரிகஸ், மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. அது நனவாகியிருக்கிறது. உலகின் தலைசிறந்த கிளப்பான மாட்ரிட்டில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in