Published : 25 Jun 2023 05:37 AM
Last Updated : 25 Jun 2023 05:37 AM
பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை வீழ்த்தியது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்துடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் சுனில் சேத்ரி 61-வது நிமிடத்திலும், நரோம் மகேஷ் சிங் 70- வது நிமிடத்திலும் தலா ஒரு கோலடித்தனர். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT