

ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினர். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.
தென் கொரியாவின் ஜிம்சியான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் பிரிவின் அரையிறுதியில், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, தாய்லாந்தின் வீராங்கனை ஓன்க்ரூங்பான் புஸனனை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிந்து 14-21, 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டை இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களில் மிகச் சிறப்பாக விளையாடி சிந்து வெற்றியை வசப்படுத்தினார்.
முந்தைய ஆட்டத்தில், இரண்டு முறை இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சீனாவின் ஷீசிங் வாங்கை சிந்து வீழ்த்தியது கவனிக்கத்தக்கது.
அதேவேளையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஆர்.எம்.வி.குருசாய் தத்தை சீனாவின் லீயு காய் 24-22, 9-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.