Published : 23 Jun 2023 08:55 AM
Last Updated : 23 Jun 2023 08:55 AM
உலக டேபிள் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், மணிகா பத்ரா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
துனியாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 11-8, 11-3, 11-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷியாவோடங் வாங்கை வீழ்த்தினார். 2வது சுற்றில் அய்ஹிகா முகர்ஜி, ஜெர்மனியின் சபின் வின்டர் அல்லது ஜப்பானின் மியு நாகசாசியுடன் மோதுவார். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் தியா சித்தலே 11-9, 7-11, 2-11, 1-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மியு கிகராவிடமும், ஸ்ரீஜா அகுலா 6-11, 11-4, 5-11, 11-2, 7-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹுவாங்கிடமும் தோல்வி அடைந்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், மணிகா பத்ரா ஜோடி 11-3, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் அல்ஜீரியாவின் அப்தெல்பாசெட் சாய்ச்சி, மலிசா நஸ்ரி ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது. சத்தியன், மணிகா பத்ரா ஜோடி கால் இறுதி சுற்றில் ஜெர்மனியின் செட்ரிக் மெய்ஸ்னர், யுவான் வான் ஜோடியை எதிர்கொள்கிறது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT