Published : 23 Jun 2023 08:29 AM
Last Updated : 23 Jun 2023 08:29 AM
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் இந்த தொடரை இங்கிலாந்து அணி கண்காட்சியாக மாற்றும் அபாயகட்டத்தில் இருப்பதாக முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் ஆதங்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கீழ்ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடி வருகிறது. இவர்களது ஆட்டம்கிரிக்கெட் உலகில் ‘பாஸ்பால்’ என வர்ணிக்கப்படுகிறது. பாஸ்பால் பாணியில் அதிரடி வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ‘பாஸ்பால்’ புரட்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் தி டெலிகிராஃப்பில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாட்டில் சிக்கிக்கொண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது. வெற்றியை விட பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ரசிகர்கள் எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டுமே விரும்புகிறார்கள். அது ஆஷஸ் தொடரை வெல்வதுதான்.
வேகமாக ரன்களை அடிப்பது, பவுண்டரிகள், சிக்ஸர்களை அடிப்பது நன்றாகவே உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்ற பெரிய பரிசை இங்கிலாந்து இழக்காமல் இருந்தால் மட்டுமே அருமையாக இருக்கும். தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை எடுத்துச் சென்றால். உங்களது ஆட்டத்தால் நாங்கள் எவ்வளவு மகிழ்ந்திருந்தாலும், நோய்வாய்ப்படுவோம்.
இங்கிலாந்து அணி வெற்றிக்காக விளையாடவில்லை என்றால், இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. அவை கண்காட்சி போட்டிகளாகவே இருக்கும். பொழுபோக்கை கொடுத்து அதன் பின் வெற்றி பெறுவது என்பது அல்ல, முதலில் வெற்றி பெறுவதில்தான் கவனம் இருக்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது சதுரங்கம் போன்றது. நீங்கள் பாதுகாக்க வேண்டிய தருணங்கள் உள்ளன. சிலசமயங்களில் நீங்கள் பொறுமையாக இருந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாக்குதல், தாக்குதல் என்ற எண்ணம் மட்டுமே வேண்டாம். இங்கிலாந்துக்கு கொஞ்சம் பொது அறிவும் நடைமுறைவாதமும் தேவை. அவர்கள் ஆஸ்திரேலியாவை விடசிறந்த அணி என்பதால் அவர்கள்நேர்மறையாக மாற வேண்டியதில்லை, பொது அறிவை பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.
பர்மிங்காமில் ஏறக்குறைய ஒவ்வொரு செஷனிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை விஞ்சியது, ஆனால் தோற்றது. ஆஸ்திரேலியாவை விட முன்னேறினாலும், பின்னர் கவனக்குறைவாக இருந்து அவர்களை மீண்டும் ஆட்டத்துக்குள்வர அனுமதித்தோம்.
ஆடுகளம் மோசம் அடைவதற்கு முன்னர் உங்களால்முடிந்த அளவு ரன்களை எடுக்க வேண்டும் என்பதுவிதி. ரூட் சதம் அடித்தநிலையில் ஆலி ராபின்சனும் பேட்டிங் செய்யக்கூடியவராகவே இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து 40-50 ரன்கள்கூடுதலாக எடுத்திருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை பெறுவதற்காக டிக்ளேர் முடிவு எடுக்கப்பட்டது.
2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வேடிக்கையாக செயல்பட்டனர். ஓவருக்கு ஐந்து, ஆறு ரன்களை எடுத்தனர். ஆனால் சில காரணங்களால் பேட்ஸ்மேன்கள் அதற்கு மேல் ரன்கள் சேர்க்கசெய்ய முயன்று தங்களது விக்கெட்களைஇழந்தனர். இது தேவையற்றது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் இங்கிலாந்து அணியைச் சுற்றியுள்ள அணுகுமுறையை மாற்றியமைக்கும் விதத்திற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றுள்ளனர், ஆனால் ஒரே ஒரு வழியில் மட்டும் விளையாடுவது உங்கள் மூளையைப் பயன்படுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. வெற்றியை விடபாராட்டுவதில் எங்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால், அது தவறு. தற்போதைய இங்கிலாந்து அணி ஆஸி.யை வீழ்த்தும் எனநானும் பல முன்னாள் வீரர்களும் நினைக்கிறோம். ஆனால் அதை உங்களது தலைக்கு ஏற்றிக்கொண்டு திறமையையும், அர்ப்பணிப்பையும் வீணாக்கிவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT