Published : 14 Oct 2017 09:06 AM
Last Updated : 14 Oct 2017 09:06 AM

மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் கடைசி ஆட்டம் ரத்து: டி 20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் அவுட் பீல்டு ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

இரு அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. கடந்த ஒரு வார காலமாக பெய்த மழை காரணமாக மைதானத்தின் எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதிகள் ஈரப்பதமாக இருந்ததால் இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் தாமதம் ஆனது. மைதான பராமரிப்பு ஊழியர்கள் அவுட் பீல்டில் மண்ணை நிரப்பி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆடுகளத்தையும், அவுட் பீல்டையும் நடுவர்கள் 3 முறை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து போட்டியை நடத்துவதற்கான உகுந்த சூழ்நிலை இல்லாததால் 8.20 மணி அளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் சமனில் முடிவடைந்ததை தொடர்ந்து இரு அணியும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x