Published : 21 Jun 2023 07:34 AM
Last Updated : 21 Jun 2023 07:34 AM
மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 4-வது சீசனுக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை லயன்ஸ், புனேரி பல்தான் அணியை ஜூலை 13-ம் தேதி எதிர்கொள்கிறது.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட மொத்தம் 18 ஆட்டங்கள் இந்த சீசனில் நடைபெறுகின்றன. 6 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். போட்டிகள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோசினிமாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 28 மற்றும் 29-ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதியும் நடைபெறுகின்றன.
பெங்களூரு ஸ்மாஷர்ஸ், தபாங் டெல்லி டிடிசி, கோவா சேலஞ்சர்ஸ் மற்றும் யு மும்பா டிடி ஆகியவை இந்தத் தொடரில் கலந்து கொண்டு பட்டம் வெல்ல போராடும் மற்ற நான்கு அணிகள் ஆகும்.
யுடிடி சீசன் 4-ல் இந்திய நட்சத்திரங்களான அச்சந்தா ஷரத் கமல், மனிகா பத்ரா, சத்தியன் ஞானசேகரன் ஆகியோருடன் நைஜீரியாவின் குவாட்ரி அருணா (உலக தரவரிசை 16) மற்றும் அமெரிக்காவின் லில்லி ஜாங் (உலக தரவரிசை 24) உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT