

உலகக் கோப்பை அரையிறுதியில் பிரேசில் அணிக்கு ஏற்பட்ட நிலைமை (ஜெர்மனியிடம் படுதோல்வி கண்டது) எல்லா அணிகளுக்கும் ஏற்படலாம் என அர்ஜென்டீனா ஸ்டிரைக்கர் செர்ஜியோ அகுரோ தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் பிரேசில் அணியை ஜெர்மனி புரட்டியெடுத்ததை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம் என்று கூறிய செர்ஜியோ, “ஜெர்மனி தலைசிறந்த அணி. ஆனால் அவர்களுக்கும் கவலை தரும் விஷயங்கள் உள்ளன. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய முன்கள வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களின் கவலைக்கான காரணம்” என்றார்.
தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாத அகுரோ, “இறுதியாட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எப்படியெல்லாம் ஆற்றலை வரவழைக்க முடியுமோ அப்படியெல்லாம் வரவழைத்து சிறப்பாக ஆடுவேன்” என்றார்.