

காங்டாக்: இளையோருக்கான தேசிய குத்துச்சண்டை போட்டியில் ரோஹித் சமோலி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள காங்டாக்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 54 கிலோ எடைப் பிரிவு ஆட்டத்தில் சண்டிகரை சேர்ந்த ரோஹித் 5-0 என்ற கணக்கில் அருணாசலபிரதேசத்தை சேர்ந்த ஜான் லாபங்கை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 48 கிலோ எடைப் பிரிவில் சண்டிகரை சேர்ந்த கிரிஷ் பால், தெலங்கானாவின் முகமது ஜுனாத்தையும், 92 கிலோ எடைப் பிரிவில் ஹரியாணாவின் பரத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷப் பாண்டேவையும் தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.