Published : 22 Oct 2017 07:12 PM
Last Updated : 22 Oct 2017 07:12 PM

ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

 

மீண்டுமொரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் மலேசியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2017 ஆசியக் கோப்பை சாம்பியன் ஆனது.

டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி அன்று 6-2 என்று வீழ்த்தியது போல் முழு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்றாலும் கடைசி நேர மலேசிய விறுவிறுப்பை சரியாக எதிர்கொண்டு 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இது இந்தியா வெல்லும் 3-வது ஆசியக் கோப்பையாகும்.

தொடக்கத்திலேயே இந்தியாவின் நவீன மொகமது ஷாகித் அல்லது தோய்பா சிங்கான எஸ்.வி.சுனில் ரமந்தீப் சிங்குடன் கூட்டணி அமைத்து 3வது நிமிடத்தில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

லலித் உபாத்யாய் 29-வது நிமிடத்தில் அற்புதமான பீல்ட் கோலை அடித்தார், இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது. கடைசி கால்மணி நேர ஆட்டத்தில் மலேசியா ஒரு கோலை அடித்து அச்சுறுத்தினாலும் தொடர்ந்து அச்சுறுத்த முடியவில்லை.

இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை இறுதிக்குள் நுழைந்தது, இன்றைய இறுதிப் போட்டியின் 3-ம் நிமிடத்தில் எஸ்.வி.சுனில் அபாரமாக பந்தை ரமந்தீப்புக்கு அளிக்க கோலை அடித்தார் ரமந்தீப். 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மலேசியா விரயம் செய்தது முதல் கால்மணி ஆட்ட முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

20-வது நிமிடத்தில் ஒரு லாங் ஷாட் இந்தியாவின் டி-யிற்குள் புகுந்தது கோலுக்குள் புகுந்தது, ஆனால் இடையில் டி-யிற்குள் எந்த ஒர் மட்டையும் பந்தில் படவில்லை எனவே கோல் இல்லை. இந்தியாவுக்கு 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் வைடாக அடித்தார்.

26-வது நிமிடத்தில் இந்திய தாக்குதல் உக்கிரம் பெற ஆகாஷ்தீப் ஷாட்டை மலேசிய கோல் கீப்பர் தட்டிவிட கார்னர் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் மலேசிய தடுப்பாட்டம் இந்திய அணியின் 2-வது கோல் முயற்சியை தடுத்தது. இதனையடுத்து 29-வது நிமிடத்திலும் எஸ்.வி.சுனிலின் ஆகத்துல்லியமான பாஸை லலித் கோலாக மாற்ற இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது .50-வது நிமிடத்தில் மலேசியா ஒரு கோலை அடித்தது, கடைசியில் 2-1 என்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x