ENG vs AUS | ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பர்மிங்காம்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பர்மிங்காமில் தொடங்குகிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் சிறந்த பார்மில் உள்ளனர். டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.

பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் ஆகியோர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். அதேவேளையில் இங்கிலாந்து அணியானது பிரண்டன் மெக்கலம் பயிற்சி பொறுப்பை ஏற்ற பிறகு மட்டை வீச்சில் அதிரடியாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகிறது.

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட பாணி, வலுவான ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in