

பெய்ஜிங்: உலக சாம்பியனான அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி டிபன்டரிடம் பந்தை பிடிகொடுக்காமல் கடத்திச் சென்றார் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி.
ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் தனது ட்ரேட் மார்க்கான இடது-கால் மூலம் பந்தை ஸ்ட்ரைக் செய்து கோலாக மாற்றி இருந்தார் மெஸ்ஸி.
இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மெஸ்ஸி 2-வது நிமிடத்திலும், ஜெர்மன் பெசெல்லா 68-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.