Last Updated : 20 Oct, 2017 10:27 AM

 

Published : 20 Oct 2017 10:27 AM
Last Updated : 20 Oct 2017 10:27 AM

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து: கால் இறுதிச் சுற்றுக்கு பிரேசில், கானா முன்னேற்றம்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 17) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டிக்கு பிரேசில், கானா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கானா - நைஜர் இடையேயான கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் கானா அணி 2-0 என்ற கோல்கணக்கில் வென்று கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. கானா அணிக்காக எரிக் அயியா 45-வது நிமிடத்தில் பெனாலிடி ஷூட் மூலமும், ரிச்சர்ட் டான்ஸோ 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற கானா அணி, கால் இறுதிச் சுற்றில் மாலி அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

நைஜர் அணியை வென்றது குறித்து கானா அணியின் பயிற்சியாளர் சாமுவேல் பாபின் கூறும்போது, “பெனாலிடி ஷூட் மூலம் முதல் பாதியில் நாங்கள் அடித்த கோல்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக இருந்தது. முக்கியமான கட்டத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் முன்னிலை பெற்றோம். மேலும் அந்த கோல் எங்கள் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தது. இப்போட்டியில் நைஜர் அணி வீரர்கள் எங்களுக்கு கடும் சவாலாக விளங்கினர்” என்றார். நைஜர் அணியின் பயிற்சியாளர் இஸ்மாலியா டிமோகோ கூறும்போது, “தற்காப்பு ஆட்டத்தில் நாங்கள் செய்த சில தவறுகளால் கானா அணி கோல்களை அடித்தது” என்றார்.

கொச்சி நகரில் நடந்த மற்றொரு போட்டியில் ஹாண்டுரஸ் அணியை எதிர்த்து பிரேசில் அணி ஆடியது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே பிரேசில் அணியின் கை ஓங்கி இருந்தது. அந்த அணியின் வீரரான பிரென்னர், 11, 56 ஆகிய நிமிடங்களிலும், ஆண்டோனியோ 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஹாண்டுரஸ் அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல்கணக்கில் எளிதாக வென்றது. கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணி ஜெர்மனியை எதிர்த்து ஆடவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x