

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 69 ரன்களை அவர் எட்டியபோது டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த 13-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
முதல் இந்தியர்: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அரை சதம் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அஜிங்கிய ரஹானே புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவலில் நடை பெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே அரை சதமெடுத்து இந்த சாதனையை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 12 சதம், 26 அரை சதங்களை அடித்துள்ளார் ரஹானே.