

கொழும்பு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்தும் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க ஆகிய 8 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இந்தத் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: தசன் ஷனகா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, சரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, லஹரு குமாரா, மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா, துஷன் ஹேமந்தா.