WTC Final | விரைந்து விக்கெட் வீழ்த்தினால் ஆட்டத்தில் கம்பேக் கொடுக்கலாம் - இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர்
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர்
Updated on
1 min read

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விரைந்து விக்கெட் வீழ்த்தினால் இந்திய அணியால் கம்பேக் கொடுக்க முடியும் என இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே (Paras Mhambrey) தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை பராஸ் தெரிவித்துள்ளார். அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காதது குறித்தும் அவர் பேசியுள்ளார். முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் அவர் இதனை பகிர்ந்திருந்தார்.

“அஸ்வின் போன்ற சாம்பியன் பவுலரை ஆடும் லெவனில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவாகும். ஆடுகளத்தின் சூழலை கருத்தில் கொண்டு அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என நினைத்தோம். கடந்த காலங்களில் அது எங்களுக்கு கைகொடுத்துள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்தோம். அணியின் காம்பினேஷனை வீரர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

முதல் 12-13 ஓவர்களுக்கு பிறகு பந்து வீச்சில் எதிர்பார்த்த அந்த நேர்த்தி இல்லை. அதிக ரன்களை கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். விரைந்து விக்கெட் வீழ்த்தினால் நிச்சயம் அது ஆட்டத்தில் நாங்கள் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in