Published : 25 Oct 2017 10:15 AM
Last Updated : 25 Oct 2017 10:15 AM

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்திய ஜோடி

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து, ஜிது ராய் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து, ஜிது ராய் ஜோடி இறுதி சுற்றில் 483.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. பிரான்சின் கோபர்விலே, போகட் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் கெய், யங் ஜோடி 418.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x