2-வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீகரத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 49.5 ஓவர்களில் 306 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிரண்டன் கிங் 70 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 228 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அலி நசீர் 57, பாஸில் ஹமீது 49, விருத்தியா அரவிந்த் 36, அயன் அப்ஸல் கான் 25 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் கவேம் ஹாட்ஜ், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் மேற்கியத் தீவுகள் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் நாளை (9-ம் தேதி) நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in