Published : 07 Jun 2023 09:12 AM
Last Updated : 07 Jun 2023 09:12 AM

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சபலெங்கா

அரினா சபலெங்கா

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

43-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 333-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x