

காமன்வெல்த் ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி வரை முன்னிலையில் இருந்த ஓம்கார், பின்னர் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் கோட்டைவிட்டார். இதனால் மலேசியாவின் முகமது ஹபிபி மன்சூரும், நைஜீரியாவின் இயின்கா அயெனுவாவாவும் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.