Published : 28 Oct 2017 08:22 PM
Last Updated : 28 Oct 2017 08:22 PM

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்தார் சிந்து

பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடர் அரையிறுதியில் வெள்ளி மங்கை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியிடம் நேர் செட்களில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.

முற்றிலும் யாமகுச்சி ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தில் சிந்துவை 21-14 21-9 என்ற நேர் செட்களில் முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முதல் கேமில் சிந்து தொடர்ச்சியாக 3 புள்ளிகளைப் பெற யாமகுச்சி அவரைவிட ஒருபடி மேலே போய் 7 புள்ளிகளைத் தொடர்ச்சியாக பெற்று 21-14 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2வது செட்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை, யாமகுச்சி 6-0 என்று விறுவிறு முன்னிலை பெற்றார். சிந்து இதிலிருந்து மீள முயற்சி செய்வதற்குள் யாமகுச்சி 12-2 என்று முன்னேறினார். இருவருக்குமான இடைவெளி அதிகமாக கடைசியில் 21-9 என்று யாமகுச்சி வென்று சிந்துவை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x