

லண்டன்: நாளை (ஜூன் 7) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளன. இந்தப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியை ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸும் வழநடத்துகின்றனர். இந்நிலையில், ஓவல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது வானிலை வெப்பமாக இருப்பதால் பந்துகள் நன்றாக சுழல்கின்றன. இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானம் சுழலுக்கு ஏற்றதாக இருக்கும். இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.