

யு-20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹீனா மல்லிக் பந்தய தூரத்தை 53.31 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்பிரீத் சிங் 55.66 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அன்டிமா பால் பந்தய தூரத்தை 17:17.11 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா ராஜராஜன் பந்தய தூரத்தை 11.91 விநாடிகளில் கடந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.