

77-வது மாநில சீனியர் நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல்குள வளாகத்தில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவருக்கான பிரஸ்ட்ரோக் நீச்சலில் ஏசஸ் அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 1 நிமிடம் 03.81 வினாடிகளில் கடந்து தனது பழைய சாதனையான 1 நிமிடம் 04.08 வினாடிகள் என்பதை முறியடித்து புதிய மீட் சாதனை படைத்தார். அனைத்து போட்டிகளின் முடிவில் ஆடவர் பிரிவில் பெனடிக்டன் (டி.டி.எஸ்.ஏ. திருநெல்வேலி), மகளிர் பிரிவில் பி.சக்தி (அன்சா துபாய்) தலா 33 புள்ளிகளை கைப்பற்றி தனிநபர் பட்டம் வென்றனர். ஏசஸ் அணி 211 புள்ளிகளை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.