ஆப்கனுக்கு இலங்கை பதிலடி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி
Updated on
1 min read

ஹம்பன்தோட்டா: இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டம் ஹம்பன்தோட்டாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 75 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், திமுத் கருணரத்னே 62 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தனர்.

பதும் நிசங்கா 43, சதீரா சமரவிக்ரமா 44, தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்கள் சேர்த்தனர். இறுதி பகுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தசன் ஷனகா 13 பந்துகளில் 23 ரன்களும், வனிந்து ஹசரங்கா 12 பந்துகளில் 29 ரன்களும் விளாசினர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் மொகமது நபி, பரீத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

324 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஹஸ்மதுல்லா ஷாகிதி 57, இப்ராகிம் ஸத்ரன் 54, ரஹ்மத் ஷா 36 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, தனஞ்ஜெயா டிசில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் துஷ்மந்தா ஷமீரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 1-1என சமநிலையை அடையச் செய்துள்ளது. ஆட்ட நாயகனாக தனஞ்ஜெயா டி சில்வா தேர்வானார். கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in