இந்தியா, இங்கிலாந்து இரண்டுமே வெற்றி பெற தகுதியற்ற அணிகள்: பாய்காட்

இந்தியா, இங்கிலாந்து இரண்டுமே வெற்றி பெற தகுதியற்ற அணிகள்: பாய்காட்
Updated on
1 min read

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது. டிரெண்ட் பிரிட்ஜ் பிட்ச் எந்த விதமான பவுலர்களுக்கும் உதவாமல் செத்த ஆட்டக்களமாக இருந்தது என்றும் இது போன்ற ஆட்டக்களம் அமைப்பதை இனியேனும் நிறுத்துவோம் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட்.

”கூழாகிப்போன ஆட்டக்களத்தில் பந்தை பிட்ச் செய்வது போல் இருந்தது. சவாலே இல்லாத வெற்றி தோல்வியில்லாத இது போன்ற உப்புச்சப்பற்ற டெஸ்ட் போட்டிகளுக்க ரசிகர்கள் இனி ஒருபோதும் மிகப்பெரிய தொகைகளைக் கொடுக்கப்போவதில்லை.

இது போன்ற ஆட்டக்களங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அல்ல எந்த வீச்சாளர்கள் வீசினாலும் அவர்களுக்கு உற்சாகம் குன்றுவதோடு, விரைவில் காயம் அடைவர், அல்லது களைப்படைவர். எந்த ஒரு நாட்டிலும் அந்த கேப்டன் தங்களுக்கு ஏற்றவாறான பிட்சைக் கேட்டுப் பெறுவதில் ஒன்றும் தவறில்லை, அது ஏமாற்று வேலையும் அல்ல, அது பொதுப்புத்தி சார்ந்த ஒன்று.

வேகமும், ஸ்விங்கும் உள்ள ஆட்டக்களங்களே இங்கிலாந்து பவுலர்களுக்கு பொருத்தமாக இருக்கும், இதில் தோற்றாலும் பிரச்சினையில்லை, ஆனால் இந்த பிட்ச் நிலைமைகளில் நாம் இந்தியாவை வீழ்த்துவோம் என்று தன்னம்பிக்கையுடன் ஆடுவது முக்கியம். தோற்றால் ஆம் நாம் தவறாக ஆடினோம் என்று ஒப்புக் கொள்வோம்.

ஜூலை 17ஆம் தேதி அடுத்த டெஸ்ட் தொடங்குகிறது அதில் அலிஸ்டர் குக் ரன்கள் எடுக்க வேண்டும், இல்லையேல் அவர் கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதே நல்லது.

அவர் இப்படியே விளையாடிக் கொண்டிருக்க முடியாது, அவரது ஆட்டம் ஒட்டுமொத்த அணியின் திறனைப் பாதிக்கிறது. அவரே முடிவை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவருக்கு எதிரான சிறு சிறு சப்தங்கள் உரத்த குரல்களாக மாறிவிடும்.

இந்தத் தொடர் மட்டுமல்ல, இந்த ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடியுள்ளது. ஆனால் ஒன்றில் கூட சீரான திறன் வெளிப்படவில்லை. பேட்டிங் மடமடவென சரிவது, எதிரணியினர் வீழ்ச்சியடையும் போது அவர்களை செட்டில் ஆக விடுவது என்று பிரச்சனைகள் இங்கிலாந்துக்கு ஏகப்பட்டது உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜில் 5ஆம் நாள் காலை இந்திய பேட்டிங்கை இங்கிலாந்து பவுலிங் அச்சுறுத்தியது, ஆனால் எந்த அணியும் வெற்றிபெறத் தகுதியானவை அல்ல, இரு அணிகளையும் பிட்ச் தோற்கடித்து விட்டது.

ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்த சாதனை ரன்களைத் தவிர இந்த டெஸ்ட் போட்டி மிகப்பெரிய அறுவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை”

இவ்வாறு பத்தி ஒன்றில் பாய்காட் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in