மெஸ்ஸி ஆட்டத்தை பார்க்க டிக்கெட் விலை ரூ.55,000

மெஸ்ஸி ஆட்டத்தை பார்க்க டிக்கெட் விலை ரூ.55,000
Updated on
1 min read

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் வரும் 15ம் தேதி நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியானது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 68 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளிக்கலாம்.

இந்த ஆட்டத்துக்கு ரூ.6,761 முதல் ரூ.55,964 வரையிலான டிக்கெட் விற்பனை இரு கட்டங்களாக வரும் 5 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். டிக்கெட் விலையின் அறிவிப்பை கண்டு சீன ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்களை வசை பாடி உள்ளனர். அதில், ஒரு ரசிகர் ‘எங்களிடம் கொள்ளை அடிக்கிறீர்கள்’ என தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‘‘மெஸ்ஸி என்ன எங்களை முதுகிலாக சுமந்து செல்லப்போகிறார்’’ என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கிடையே இணையதளத்தில் டிக்கெட் விற்பனை செய்யும் சீன நிறுவனம் ஒன்று அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டிக்கான விஐபி டிக்கெட்டின் விலை ரூ.2,09,868 என அறிவித்துள்ளது. - ஏஎப்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in