Published : 03 Jun 2023 06:01 AM
Last Updated : 03 Jun 2023 06:01 AM

இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஹம்பன்தோட்டா: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

ஹம்பன்தோட்டாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாரித் அஷலங்கா 95 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய தனஞ்ஜெயா டி சில்வா 59 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பரூக்கி, பரீத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 269 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இப்ராகிம் ஸத்ரன் 98 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார். ரஹ்மத் ஷா 80 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்தார். மொகமது நபி 27, நஜ்புல்லா ஸத்ரன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x