பிஹார் விராட் ராமாயண கோயில் வளாகத்தில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் ஜன.17-ல் பிரதிஷ்டை

33 அடி உயரத்​தில் மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டு அனுப்பிவைப்பு
பிஹார் விராட் ராமாயண கோயில் வளாகத்தில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் ஜன.17-ல் பிரதிஷ்டை
Updated on
1 min read

புதுடெல்லி: பிஹாரின் கிழக்கு சம்​பாரன் மாவட்​டம் கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்​டப்​பட்டு வரு​கிறது. கோயில் வளாகத்​தில் 33 அடி உயரத்​தில் உலகின் மிகப்​பெரிய சிவலிங்​கம் பிர​திஷ்டை செய்​யப்பட உள்​ளது.

இந்த லிங்​கம், தமிழ்​நாட்​டின் மாமல்​லபுரத்​தில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் செதுக்​கப்​பட்​டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள பட்​டிக்​காடு கிராமத்​தைச் சேர்ந்த சிற்​பக் கலைஞர்​கள் இதை செதுக்கி உள்ளனர். இதற்​காக அவர்​கள் சுமார் 10 ஆண்​டு​கள் எடுத்துக்கொண்டனர்.

மாமல்​லபுரத்​தில் இருந்து இந்த லிங்​கம் 96 சக்​கரங்​கள் கொண்ட லாரி மூலம் சுமார் 47 நாட்​கள் பயணத்​துக்கு பிறகு கடந்த திங்​கள் ​கிழமை கேசரி​யாவை வந்​தடைந்​தது. இந்​தப் பயணத்​தின்​ போது அந்த லாரி எங்கு நின்​றாலும், அதைப் பார்க்க பெரும் கூட்​டம் கூடியது. கேசரியா வந்த தகவலைக் கேட்டு லிங்​கத்தை காண தின​மும் ஏராள​மானோர் குவி​கின்​றனர்.

ஜனவரி 17-ம் தேதி இந்த லிங்​கத்​துக்கு பிராண பிர​திஷ்டை செய்யப்பட உள்​ளது. பிறகு நிபுணர்​களின் மேற்​பார்​வை​யில் சிவலிங்​கம் நிறு​வப்பட உள்​ளது. ஹரித்​வார், பிர​யாக்​ராஜ், கங்​கோத்​ரி, கைலாஷ் மானசரோவர், சோன்​பூர் ஆகிய இடங்​களில் இருந்து 5 நதி​களின் நீர் சிவலிங்​கத்​தின் அபிஷேகத்​துக்காக கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

இந்த சிவலிங்​கம் 'சஹஸ்​ரலிங்​கம்’ என அழைக்​கப்​படு​கிறது. இதில் 1008 சிறிய லிங்​கங்​கள் செதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்த சிவலிங்​கத்துக்கு நீர் அபிஷேகம் செய்​தால், 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்​ணி​யம் கிடைக்​கும் என்​பது நம்​பிக்​கை. விராட் ராமாயண கோயி​லின் மொத்​தப் பரப்பளவு 120 ஏக்​கர் ஆகும். இது, 2,800 அடி நீள​மும் 1,400 அடி அகல​மும் கொண்​ட​தாக இருக்​கும்.

பிஹார் விராட் ராமாயண கோயில் வளாகத்தில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் ஜன.17-ல் பிரதிஷ்டை
பிரபல சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் காலமானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in