திருச்சி மாணிக்க விநாயகர், உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை நெய்வேத்தியம்

திருச்சி மாணிக்க விநாயகர், உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை நெய்வேத்தியம்

படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
1 min read

திருச்சி: திருச்சியின் அடையாளமாய் விளங்கும் மலைக்கோட்டையில் மலையடி வாரத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகருக்கும் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும் 150 கிலோ கொழுக்கட்டை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று தயார் செய்யப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கொல்கட்டி தயார் செய்யும் பணி கடந்த 13ஆம் தேதி காலை தொடங்கி நடைபெற்று வந்தது தொடர்ந்து இன்று 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை உச்சிப்பிள்ளையாருக்கும் காலை 9 மணிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. தயாரான கொழுக்கட்டையை உச்சிப்பிள்ளையாருக்கு படைக்க டோலியில் கோயில் பணியாளர்கள் எடுத்து சென்று நெய்வேதியம் செய்தனர்.

கொழுக்கட்டை பச்சரிசி வெள்ளம் தேங்காய் போன்றவற்றால் கோயில் பணியாளர்களால் பக்தி சிரத்தையுடன் தயார் செய்யப்பட்டது. வருடத்தில் ஒரே முறை மட்டும் விநாயகர் சதுர்த்தி அன்று உச்சிப் பிள்ளையார் பிள்ளையார் புறப்பாடு கோவில் பிரகாரம் மற்றும் உள்வீதி வெளிவீதிகளில் நடைபெறும். இன்று விநாயகர் புறப்பாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாணிக்க விநாயகர், உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை நெய்வேத்தியம்
கோவை மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in