திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: மே மாத டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: மே மாத டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
Updated on
1 min read

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை வரும் மே மாதத்​தில் தரிசனம் செய்​வதற்​கான டிக்​கெட்​டுகளை திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் இணை​யத்​தில் நாளை வெளி​யிட உள்​ளது.

அதன்​படி, 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் சுப்​ர​பாதம், தோமாலை சேவை, அர்ச்​சனை, அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை போன்ற ஆர்​ஜித சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

21ம் தேதி காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். 23ம் தேதி காலை 10 மணிக்கு இலவச​மாக அங்​க பிரதட்சண டோக்​கன்​களும், 11 மணிக்கு ஸ்ரீ​வாணி அறக்கட்டளைக்​கான டிக்​கெட்​டு​களும், இதே நாள் மதி​யம் 3 மணிக்கு மாற்றுத்திற​னாளி பக்​தர்​கள், மூத்த குடிமகன்களுக்கான டிக்​கெட்​டு​களை​யும் பக்​தர்​கள் முன்​ப​திவு செய்யலாம்.

இம்​மாதம் 24ம் தேதி காலை 10 மணிக்கு மே மாதத்​திற்​கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். இதனை தொடர்ந்​து, அதே நாள் மதி​யம் 3 மணிக்கு தங்​கும் அறை​களுக்​கான டிக்​கெட்​டு​களை​யும் பக்தர்கள்​ முன்​ப​திவு செய்​து கொள்​ளலாம்​.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: மே மாத டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
ஒடிசாவில் குண்டு தயாரித்தபோது வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in