செப்டம்பரில் ஏழுமலையானை தரிசிக்க 18-ம் தேதி டிக்கெட் வெளியீடு

செப்டம்பரில் ஏழுமலையானை தரிசிக்க 18-ம் தேதி டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யானை வரும் செப்​டம்​பர் மாதம் தரிசனம் செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்​காக வரும் 18-ம் தேதி முதல் ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் இணை​யத்​தில் வெளி​யாகும் என திருப்​பதி தேவஸ்​தானம் தெரி​வித்​துள்​ளது.

செப்​டம்​பர் மாதம் ஏழு​மலை​யானை தரிசிக்க வரும் ஜூன் 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் சுப்​ர​பாதம், தோமாலை சேவை, அர்ச்​சனை, அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை போன்ற ஆர்​ஜித சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவச​மாக அங்​கபிரதட்சண டோக்​கன்​களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்​கட்​டளைக்​கான டிக்​கெட்​டு​களும், இதே நாள் மதி​யம் 3 மணிக்கு மாற்று திற​னாளி பக்​தர்​கள் மற்​றும் மூத்த குடிமகன்​களுக்​கான டிக்​கெட்​டு​களை​யும் பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

செப்டம்பரில் ஏழுமலையானை தரிசிக்க 18-ம் தேதி டிக்கெட் வெளியீடு
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in