திருப்பதி பிரம்மோற்சவம் 8-ம் நாள் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்பதி பிரம்மோற்சவம் 8-ம் நாள் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்கியது. 8-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்​கியது.

தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கய்ய நாயுடு உட்பட திரளான பக்​தர்​கள் தேரை இழுத்​தனர். மாட வீதி​களில் ஏழு​மலை​யானின் தேர் கம்​பீர​மாக உலா வந்​தது. வழி நெடு​கிலும் திரளான பக்​தர்​கள் தேரின் மீது மிளகு, உப்பு போன்​றவற்றை தூவி நேர்த்​திக்​கடன் செலுத்​தினர்.

சுமார் 3 மணி நேரம் வரை தேரோட்​டம் வெகு சிறப்​பாக ‘கோவிந்தா... கோ​விந்​தா’ எனும் கோஷத்​துடன் நடை​பெற்​றது. குதிரை வாகன சேவை நேற்​றிரவு குதிரை வாக​னத்​தில் கல்கி அலங்​காரத்​தில் மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார்.

அப்​போது மாட வீதி​களில் திரண்​டிருந்த பக்​தர்​கள் ஆரத்தி எடுத்து வழிபட்​டனர். மேலும் நடன கலைஞர்​களின் நடன நிகழ்ச்​சிகளும் அனை​வரை​யும் கவர்ந்​தன. குதிரை வாக​னம் பிரம்​மோற்​சவத்​தின் கடைசி வாகன சேவை​யாகும். இதில் ஜீயர்​கள், தேவஸ்​தான உயர் அதி​காரி​கள், பக்​தர்​கள் கலந்து கொண்டு சிறப்​பித்​தனர்.

சக்​கர ஸ்​நானத்​துடன் நிறைவு வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா​வின் நிறைவு நாளான இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை திரு​மலை​யில் ஏழு​மலை​யானின் கோயில் அருகே உள்ள வராக சுவாமி திருக்​கோ​யில் தெப்​பக்​குளத்​தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பரும், சக்​கரத்​தாழ்​வாரும் கோயி​லில் இருந்து ஊர்​வல​மாக தெப்​பக் குளக்​கரைக்கு கொண்டு வரப்​படு​வர்.

அங்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்த பின்​னர், சக்​கரத்தாழ்​வார் தீர்த்​த​வாரி நடை​பெறும். அப்​போது அந்த நொடிக்காக காத்​திருக்​கும் திரளான பக்​தர்​கள் குளத்​தில் இறங்கி புனித நீராடுவர். இந்​நிகழ்ச்​சியை தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடை​பெற்று பிரம்​மோற்​சவம் நிறைவுறும்.

திருப்பதி பிரம்மோற்சவம் 8-ம் நாள் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in