

நேரக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு திடீரென நேர கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் என மூன்று வரிசைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் வளா கத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை யில், ‘கட்டண தரிசன வழியில் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் பொதுவாக சாதாரண நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, இடைவேளையின்றி பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகை பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாகம் விளக்கம்: இதுதொடர்பாக, கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்டண தரிசனத்துக்கு மாலை 6.30 மணி வரைதான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பொது தரிசனத்துக்கு இரவு 7 மணி வரைதான் அனுமதிக்கப்படுவர். ஆனால், இதை சிலர் தவறாக புரிந்துகொண்டு, ‘இனி மாலைக்கு பிறகு தரிசனம் கிடையாது’ என தவறான செய்தி பரவுகிறது. தரிசன நேரம் குறைக்கப்படவில்லை.