திருச்சானூர் பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபையில் பத்மாவதி தாயார் பவனி

திருச்சானூர் பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபையில் பத்மாவதி தாயார் பவனி
Updated on
1 min read

திருப்பதி: திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தின​மும் காலை, இரவு என இரு வேளை​களி​லும் தாயார் பல்​வேறு வாக​னங்களில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் பாலித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் யோக நாராயணி அலங்​காரத்​தில் எழுந்​தருளி​னார். வாகன மண்​டபத்​தில் இருந்து காலை 8 மணி முதல் 10 மணி வரை 4 மாட வீதி​களில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு தாயாரை வழிப்​பட்​டனர்.

இதனை தொடர்ந்​து, இரவு சந்​திர பிரபை வாக​னத்​தில் காட்சியளித்​தார். மாட வீதி​களில் பல்​வேறு மாநில நடன கலைஞர்​களின் நிகழ்ச்​சிகள் அனை​வரை​யும் கவர்ந்​தது. இன்று பிரம்​மோற்​சவத்​தின் 8ம் நாளாகும். இன்று காலை தேரோட்​ட​மும், இரவு குதிரை வாக​னத்​தி​லும் தாயார் அருள் பாலிக்க உள்​ளார்.

நாளை பஞ்​சமி தீர்த்த நிகழ்ச்​சி​யோடு பிரம்​மோற்​சவம் நிறைவடைகிறது. திருச்​சானூர் பத்​மாவதி தாயார் அவதரித்த தாமரை தடாக குளத்​தில் நாளை தாயார், சக்​கரத் ​தாழ்​வாருக்கு சிறப்பு திரு​மஞ்சன சேவை நடை​பெற உள்​ளது. நாளை மதி​யம் 12 மணிக்கு புனித பஞ்​சமி தீர்த்​த​வாரி நிகழ்ச்சி நடை​பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in