ரூ.5 ஆயிரம் வழங்கி புண்ணியம் செய்துள்ள முதல்வர்: திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பாராட்டு

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்

Updated on
1 min read

கும்பகோணம்: ரூ.5 ஆயிரம் வழங்கி தமிழக முதல்​வர் புண்ணியம் செய்​துள்​ளார் என்​றும், தர்​மம்​தான் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்​லும் என்று திரு​வாவடு​துறை ஆதீனகர்த்​தர் பாராட்டி​உள்​ளார்.

கும்​பகோணத்தை அடுத்த திரு​விடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயி​லில் தேரோடும் வீதி​களில் ரூ.5 கோடி மதிப்​பில் மின் புதைவடம் அமைக்​கும் திட்​டத் தொடக்க விழா நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

மின் புதைவடம் பதிக்​கும் பணி

அமைச்​சர் கோவி.செழியன் முன்​னிலை​யில் பூஜிக்​கப்​பட்ட செங்​கலை வழங்​கி, திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு​ம​காசந்​நி​தானம் ல அம்​பல​வாண தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள் மின் புதைவடம் பதிக்​கும் பணியை தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: கோயில்​களில் விளக்கு ஏற்​று​வது புண்ணியம். திரு​மறைக்​காட்​டில் அணை​யும் நிலை​யில் இருந்த விளக்​கின் திரியை எலி ஒன்று தூண்​டி​விட்​ட​தால், அடுத்த பிற​வி​யில் மகாபலி சக்கர​வர்த்​தி​யாக இறைவன் பிறக்​கச் செய்து பெரு​மைப்​படுத்​தி​னார் என்று கூறப்​படு​வது உண்டு.

அதன்​படி, திரு​விடைமருதூர் நான்கு வீதி​களி​லும் தடை​யின்றி மின்​விநி​யோகம் இருக்​கும் வகை​யில் மின் புதைவடம் பதிக்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் வழங்கி இருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

அன்னதானத் திட்டம்...

தமிழகத்​தில் நல்​லாட்​சியை முதல்​வர் ஸ்டா​லின் செய்து வரு​கிறார். எந்​தச் சூழ்​நிலை​யிலும் பாவம் செய்​யாமல், பிறருக்கு உதவி செய்ய வேண்​டும். தர்​மம் செய்​தால் புண்ணியம். பாவம் செய்​தால் துன்​பம். நாம் என்ன செய்​கிறோமோ, அதுவே நமக்கு திரும்ப கிடைக்​கும்.

கோயில்​களில் அன்​ன​தானத் திட்​டத்தை ஆட்​சி​யாளர்​கள் தொடர்ந்து நடத்தி வரு​வது பாராட்​டுக்​குரியது. எல்​லோருக்​கும் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ரூ.5 ஆயிரம் வழங்கி புண்ணியம் செய்​துள்​ளார். இலவசம் கொடுப்​பதும் தர்​மம் தான். அதுதான் நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்​செல்​லும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்</p></div>
தமிழகத்துக்கு அதிக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொடுத்தவர் பிரதமர் மோடி: சி.பி.​ராதாகிருஷ்ணன் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in