திருவாரூர் அருகே பதவி தரும் திருக்கோயிலில் தமிழிசை தரிசனம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே, பதவி தரும் திருக்கோயிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருச்சிறுகுடி என்ற கிராமத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மங்களாம்பிகை சமேத சூக்ஷ்ம புரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த தளத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் பூஜித்தலமாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் பதவிகளையும், வாழ்வில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வல்லமை வாய்ந்த தளமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இந்த கோயிலுக்கு வருகை தந்து அர்ச்சனை செய்து வழிபட்டார். கொட்டும் மழையிலும் அருகில் உள்ளவர்கள் குடை பிடித்தபடி, பிரகாரங்களை சுற்றி சாமி தரிசனம் செய்தார். தமிழிசை சவுந்தரராஜனின் வருகை குறித்து முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
